இலங்கையில் நிலவும் சீரற்ற வானிலை : தயார் நிலையில் ஹெலிகாப்டர்கள்!

#SriLanka #weather #sri lanka tamil news
Thamilini
1 year ago
இலங்கையில் நிலவும் சீரற்ற வானிலை : தயார் நிலையில் ஹெலிகாப்டர்கள்!

மோசமான வானிலை காரணமாக அவசரநிலை ஏற்பட்டால் நிவாரணம் மற்றும் மீட்பு நடவடிக்கைகளுக்காக விமானம் மற்றும் தொடர்புடைய படையினரை நிலைநிறுத்த விமானப்படை நடவடிக்கை எடுத்துள்ளது. 

 இதன்படி, வானிலிருந்து ஏற்படக்கூடிய அனர்த்தங்களை தொடர்ச்சியாக கண்காணிப்பதற்காக விமானப்படையின் கண்காணிப்பு விமானங்கள் நிறுத்தப்பட்டுள்ளதுடன், அனர்த்தம் ஏற்பட்டால் மக்களுக்கு நிவாரணம் மற்றும் மீட்பு நடவடிக்கைகளுக்காக மூன்று ஹெலிகாப்டர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. 

 ரத்மலானை விமானப்படை தளத்தில் 'பெல்-412' ரக ஹெலிகொப்டர் ஒன்றும், ஹிகுராக்கொட விமானப்படை தளம் மற்றும் பலாலி விமானப்படை தளம் ஆகியவற்றில் இரண்டு 'பெல்-212' ரக ஹெலிகொப்டர்கள் நிறுத்தப்பட்டுள்ளதாக விமானப்படை தெரிவித்துள்ளது. 

 மீட்புப் பணிகளுக்காக சிறப்புப் பயிற்சி பெற்ற விமானப்படை படைப்பிரிவின் சிறப்புப் படை வீரர்களும் அந்த முகாம்களில் தயார்படுத்தப்பட்டுள்ளனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
சிறப்பு கட்டுரை