சீரற்ற வானிலை : இரு மாவட்டங்களில் உள்ள பாடசாலைகளுக்கு விடுமுறை!
#SriLanka
#School
Thamilini
1 year ago
இலங்கையில் நிலவி வரும் மோசமான காலநிலை காரணமாக கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் பல பாடசாலைகளை நாளை (14) மூடுவதற்கு கல்வி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இதன்படி, கொழும்பு மாவட்டத்தின் கொலன்னாவ மற்றும் கடுவெல கல்விப் பிரிவுகளில் உள்ள அனைத்துப் பாடசாலைகளும் நாளை மூடப்படும் என மேல் மாகாண கல்விப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
மேலும், கம்பஹா மாவட்டத்தின் வத்தளை கல்விப் பிரிவில் உள்ள அனைத்துப் பாடசாலைகளும் நாளை மூடப்படவுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.