IND vs BAN - வங்கதேச அணிக்கு இமாலய வெற்றி இலக்கு

#India #T20 #Cricket #Bangladesh
Prasu
10 months ago
IND vs BAN - வங்கதேச அணிக்கு இமாலய வெற்றி இலக்கு

இந்தியா- வங்கதேச அணிகளுக்கு இடையேயான 2-வது டி20 போட்டி டெல்லியில் இன்று நடைபெற்றது.

இதில் டாஸ் வென்ற வங்கதேசம் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி இந்திய அணியின் தொடக்க வீரர்களாக சாம்சன் - அபிஷேக் சர்மா களமிறங்கினர். 

சஞ்சு சாம்சன் 10, அபிஷேக் சர்மா 15, சூர்யகுமார் யாதவ் 8 என அடுத்தடுத்து வெளியேறினர். இதனையடுத்து நிதிஷ் ரெட்டி - ரிங்கு சிங் ஜோடி சேர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

முதலில் நிதாமான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிதிஷ் போக போக அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி அரை சதம் அடித்தார். அவர் 34 பந்தில் 74 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

அதனை தொடர்ந்து தன் பங்குக்கு அதிரடியாக விளையாடிய ரிங்கு 29 பந்தில் 53 ரன்கள் குவித்து வெளியேறினார்.

 இதனால் இந்திய அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 221 ரன்கள் எடுத்தது. வங்கதேச தரப்பில் ரிஷாத் ஹொசைன் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!