நுவரெலியா தபால் நிலைய கட்டடம் தொடர்பில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் இடைநிறுத்தம்!

#SriLanka #NuwaraEliya
Thamilini
1 year ago
நுவரெலியா தபால் நிலைய கட்டடம் தொடர்பில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் இடைநிறுத்தம்!

130 வருடங்கள் பழமை வாய்ந்த நுவரெலியா தபால் நிலைய கட்டடம் தொடர்பில் இதுவரை எடுக்கப்பட்ட அனைத்து தீர்மானங்களும் இடைநிறுத்தப்படுவதாக அமைச்சர் விஜித ஹேரத் இன்று (09.10) தெரிவித்தார். 

 150வது உலக தபால் தினத்தை முன்னிட்டு ஆலய இல்லத்தில் நடைபெற்ற வைபவத்தில் அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். 

 நுவரெலியா தபால் நிலையம், அந்த கட்டிடம் மற்றும் அதன் வளாகம் என்பன தபால் திணைக்களத்தின் செயற்பாடுகளுக்கு மாத்திரமே பயன்படுத்தப்படுவதாக அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

 அமைச்சர் விஜித ஹேரத், “கடந்த காலங்களில் நுவரெலியா தபால் நிலைய கட்டிடத்தை வலுக்கட்டாயமாக சுவீகரிக்க தீர்மானிக்கப்பட்டது.புதிய அரசாங்கத்தின் கொள்கைகளின்படி இனிமேல் தபால் திணைக்களத்தின் செயற்பாடுகளுக்கு மட்டுமே நுவரெலியா தபால் நிலைய கட்டிடம் மற்றும் காணி ஒதுக்கீடு செய்யப்படும்.

 இதுவரை எடுக்கப்பட்ட முடிவுகள் வேறு யாருக்கும் வழங்கப்படாது. ஹோட்டல் திட்டத்திற்காக நுவரெலியா தபால் நிலைய கட்டிடத்தை தனியாரிடம் கையளிக்கும் நடவடிக்கை தொடர்பில் அண்மைக்காலமாக அதிகளவில் பேசப்பட்டு வருகின்றது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
சிறப்பு கட்டுரை