கொழும்பு - பதுளைக்கான இரயில் சேவைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன!
#SriLanka
#Train
Dhushanthini K
10 months ago

இந்திய-இலங்கை கூட்டு திரைப்படத் திட்டம் காரணமாக கொழும்பு கோட்டைக்கும் பதுளைக்கும் இடையிலான ரயில் சேவைகள் இன்று முதல் ஒக்டோபர் 15 ஆம் திகதி வரை எல்ல நிலையம் வரை மட்டுப்படுத்தப்படும் என ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.
எல்ல மற்றும் தெமோதர நிலையங்களுக்கு இடையிலான ஒன்பது வளைவுகள் பாலத்தில் படப்பிடிப்பு நடைபெறுவதால், போக்குவரத்து அமைச்சகத்தால் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
இதனால், இந்த நிலையங்களுக்கு இடையிலான ரயில் சேவைகள் தினமும் காலை 7:30 மணி முதல் மாலை 5:30 மணி வரை கட்டுப்படுத்தப்படும்.



