நாட்டில் நிலவும் சீரற்ற வானிலையால் 145 குடும்பங்கள் பாதிப்பு!

#SriLanka #weather
Mayoorikka
1 year ago
நாட்டில் நிலவும் சீரற்ற வானிலையால் 145 குடும்பங்கள் பாதிப்பு!

நாட்டின் பல பகுதிகளில் 100 மில்லி மீற்றருக்கும் அதிக மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

 இதனிடையே, புளத்சிங்கள - குடா கங்கையின் நீர் மட்டம் அதிகரித்துள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.

 நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக கொழும்பு மற்றும் கேகாலை மாவட்டங்கள் அதிக அளவில் பாதிப்பை எதிர்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

 இதன்படி, குறித்த இரு மாவட்டங்களில் 145 குடும்பங்களைச் சேர்ந்த 716 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன், 4 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன என அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
சிறப்பு கட்டுரை