முன்னாள் இலங்கை கிரிக்கெட் வீரரை கைது செய்ய பிடியாணை பிறப்பிப்பு
#SriLanka
#Arrest
#Cricket
#Player
#HighCourt
Prasu
1 year ago
இலங்கை கிரிக்கெட் அணியின் தெரிவுக்குழுவின் தலைவர் உபுல் தரங்க இன்று (8) நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறியதையடுத்து அவரை கைது செய்ய பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மாத்தளை மேல் நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட பிடியாணை, கண்டியில் நடைபெற்ற லெஜண்ட்ஸ் லீக் போட்டித் தொடர் தொடர்பாக தரங்கா முதலில் தெரிவித்திருந்த ஆட்ட நிர்ணய வழக்குடன் தொடர்புடையது.
தரங்கா தற்போது அமெரிக்காவில் இருப்பதாகவும், அங்கு அவர் பிரான்சைஸ் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்க உள்ளதாகவும் தகவல் வெளியானது.