இலங்கையில் தீர்க்கப்படாத 7 முக்கிய குற்றங்கள் தொடர்பான விசாரணைகள் மீள ஆரம்பம்
#SriLanka
#Murder
#Investigation
#Case
#Kidnap
Prasu
10 months ago

இலங்கையில் தீர்க்கப்படாத மற்றும் சர்ச்சைக்குரிய ஏழு கொலைகள் மற்றும் மோசடிகள் தொடர்பான விசாரணைகளை மீள ஆரம்பிக்க இலங்கை ஜனாதிபதி கௌரவ அனுரகுமார திஸாநாயக்கவின் தலைமையிலான புதிய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அண்மையில் பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்ன தலைமையில் கூடிய விசேட குழு, விசாரணைகளை மீள ஆரம்பிக்க வேண்டும் என தீர்மானித்துள்ளது.
ஈஸ்டர் தாக்குதல், பிணைமுறி மோசட, லசந்த படுகொலை, தாஜுதீன் படுகொலை, எக்னலிகொட கடத்தி காணாமல் போனமை, கொழும்பில் வைத்து பணத்திற்காக கடத்தப்பட்ட திருகோணமலை கடற்படை முகாமில் வைத்து கொல்லப்ட்ட 11 இளைஞர்களின் வழக்கு, சர்ச்சைக்குரிய மிக் விமான கொள்வனவின் போது இடம்பெற்ற ஊழல் போன்ற வழக்கு விசாரணைகள் மீள ஆரம்பிக்கப்படவுள்ளன.



