பாகிஸ்தானில் நடந்த சாலை விபத்தில் ஐவர் மரணம்
#Death
#Accident
#Pakistan
#Road
Prasu
1 year ago
பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மகாணம் லாகூரில் உள்ள நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை பஸ் சென்றுகொண்டிருந்தது. பஸ் வேகமாக சென்றுகொண்டிருந்தபோது டிரைவர் உறங்கியுள்ளார்.
இதனால், சாலையில் முன்னே சென்றுகொண்டிருந்த வேன் மீது அதிவேகமாக மோதியது. இந்த கோர விபத்தில் வேனில் பயணம் செய்த 5 பேர் உயிரிழந்தனர். மேலும், 6 பேர் காயமடைந்தனர்.
தகவலறிந்து விரைந்து வந்த மீட்புக்குழுவினர் காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.