நேபாளத்தில் மாயமான 5 ரஷ்ய மலையேறும் வீரர்கள் சடலமாக மீட்பு

#Death #Russia #Nepal #Mountain
Prasu
7 months ago
நேபாளத்தில் மாயமான 5 ரஷ்ய  மலையேறும் வீரர்கள் சடலமாக மீட்பு

இந்தியா, நேபாளம் இடையே இமயமலை உள்ளது. இமயமலையின் சிகரங்களில் ஏற உலகம் முழுவதில் இருந்து மலையேற்ற வீரர், வீராங்கனைகளும், சுற்றுலா பயணிகளும் ஆர்வம் காட்டி வருகின்றனர்

இதனிடையே, ரஷியாவை சேர்ந்த 5 மலையேற்ற வீரர்கள் கடந்த 6ம் தேதி நேபாளத்தில் இருந்து இமயமலையின் தளகிரி சிகரத்தை நோக்கி பயணத்தை தொடங்கினர். 

முகாமில் இருந்து காலை 6 மணிக்கு பயணத்தை தொடங்கிய வீரர்கள் உடனான ரேடியோ தொடர்பு காலை 11 மணியளவில் துண்டிக்கப்பட்டது. இதையடுத்து மாயமான மலையேற்ற வீரர்களை தேடும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டன.

இந்நிலையில், மாயமான மலையேற்ற வீரர்கள் 5 பேரும் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். ஹெலிகாப்டர் மூலம் நடைபெற்ற தேடுதல் பணியின்போது மலையின் 7 கிலோமீட்டர் உயரத்தில் 5 பேரின் உடல்களும் மீட்கப்பட்டுள்ளது. 

மலை சிகரத்தில் இருந்து கீழே விழுந்து 5 பேரும் உயிரிழந்திருக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், இச்சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!