நெல் விவசாயிகளுக்கு உரமானியம் வழங்குவது தொடர்பில் வெளியான தகவல்!
#SriLanka
Dhushanthini K
10 months ago

நெல் விவசாயிகளுக்கான 25,000 ரூபா உர மானியம் எதிர்வரும் திங்கட்கிழமை அம்பாறை மாவட்டத்தில் இருந்து ஆரம்பிக்கப்படும் என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், இந்தப் பருவம் ஆரம்பிக்கவுள்ளது. இந்த உர மானியத்தை அடுத்த வாரம் திங்கட்கிழமைக்குள் அம்பாறை மாவட்ட மக்களுக்கு வழங்க உள்ளோம்.
அதன் பின்னர் பொலன்னறுவை, அனுராதபுரம், மஹியங்கனை மற்றும் மகாவலி பிரதேச விவசாயிகளுக்கு வழங்க உள்ளோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.



