நிதி மோசடியில் ஈடுபட்ட 19 சீன பிரஜைகள் கைது!
#SriLanka
#China
#Crime
Mayoorikka
1 year ago
இணையம் ஊடாக நிதி மோசடியில் ஈடுபட்ட மேலும் 19 சீன பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளனர். குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் நாவல பகுதியில் வைத்து குறித்த 19 பேரும் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டனர்.
நிதி மோசடி தொடர்பில் அண்மையில் கைதான 40 வெளிநாட்டவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கமைய குறித்த சீன பிரஜைகள் கைதாகினர்.
இதன்படி, இணையம் மூலம் நிதி மோசடியில் ஈடுபட்ட வெளிநாட்டவர்களின் எண்ணிக்கை 59ஆக அதிகரித்துள்ளது.
இதுவரை கைது செய்யப்பட்டவர்களில் 49 சீன பிரஜைகளும், நான்கு இந்தியப் பிரஜைகளும், 6 தாய்லாந்து பிரஜைகளும் அடங்குகின்றனர்.
கைதானவர்களிடம் இருந்த 499 கையடக்க தொலைபேசிகளும், 24 மடிக்கணினிகளும் கைப்பற்றப்பட்டிருந்தன.