புதிய அரசாங்கத்தின் பதில் பொலிஸ்மா அதிபர் முன்மொழிவு

#SriLanka #Police #AnuraKumara
Mayoorikka
10 months ago
புதிய அரசாங்கத்தின் பதில் பொலிஸ்மா அதிபர் முன்மொழிவு

புதிய அரசாங்கத்தின் கீழ் பதில் பொலிஸ்மா அதிபராக சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய நியமிக்க முன்மொழியப்பட்டுள்ளதாக அரசாங்க உயர்மட்ட வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

 36 வருடங்களாக பொலிஸ் திணைக்களத்தில் தொடர்ந்து சேவையாற்றிய இவர், பொலிஸ் கான்ஸ்டபிள் பதவியிலிருந்து சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் பதவி வரை பல்வேறு மட்டங்களில் சேவையாற்றியவர்.

 கொழும்பு பல்கலைக்கழகத்தின் சட்டப் பட்டதாரியாகவும், இலங்கை சட்டக் கல்லூரியின் சட்டத்தரணியாகவும் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டதன் பின்னர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

 பதில் பொலிஸ் மா அதிபர் பதவிக்கு சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்களான பிரியந்த வீரசூரிய மற்றும் லலித் பதிநாயக்க ஆகியோர் முன்மொழியப்பட்டதாகவும் அவர்களில் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய ஆகியோர் முன்மொழியப்பட்டதாகவும் அரசாங்க வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!