இன்று கொழும்பில் இடம்பெறவுள்ள முக்கிய சந்திப்பு!
#SriLanka
#Colombo
#Sajith Premadasa
Mayoorikka
10 months ago

ஐக்கிய மக்கள் கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சி தலைவர்களுக்கு இடையிலான சந்திப்பு ஒன்று இன்று இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடும் விதம் தொடர்பில் கலந்துரையாடுவதற்காகவே இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளது.
கொழும்பில் இடம்பெறவுள்ள சந்திப்பிற்காக ஐக்கிய மக்கள் கூட்டணியில் அங்கம் வகிக்கும் அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, பொதுத்தேர்தலில் போட்டியிட ஐக்கிய தேசியக் கட்சி, ஐக்கிய மக்கள் சக்திக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்ததாக செய்திகள் வெளியாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.



