106 வயதில் தனது வாக்கினை பதிவு செய்த மூத்த குடிமகன்!
#SriLanka
#Trincomalee
#Election
Mayoorikka
10 months ago

திருகோணமலை மாவட்டத்தின் மூத்த குடிமகன் ஒருவர் தனது 106 வயதில் தனது வாக்கினை பதிவு செய்திருந்தார்.
திருகோணமலையின் மூத்த பிரஜையான ஜோன் பிலிப் லூயிஸ் (வயது 106) நாட்டின் 9வது ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான தனது வாக்கினை இன்று சனிக்கிழமை (21) காலை திருகோணமலை புனித மரியாள் கல்லுரியில் பதிவு செய்திருந்தார்.
நாட்டில் இதுவரை காலமும் குறிப்பாக ஒன்பது தடவையாக இடம்பெறுகின்ற ஜனாதிபதி தேர்தலில் தனது வாக்கினை பதிவு செய்ததாகவும் நல்லதோர் ஆட்சியாளர் வரவேண்டும் என்ற நோக்கத்துடன் தனது வாக்கினை அளித்திருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
அத்துடன், இறைவனது ஆசியுடன் எதிர்வரும் காலங்களில் இடம்பெறும் தேர்தலிலும் வாக்களிக்க தயாராக இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.



