தடையையும் மீறி தனது வாக்குச் சீட்டை புகைப்படம் எடுத்த நபர் கைது
#SriLanka
#Election
#Arrest
Prasu
10 months ago

தனது வாக்குச் சீட்டை புகைப்படம் எடுத்த நபரொருவர் இன்று (21) காலை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மிட்டியாகொடை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தெல்வத்தை பிரதேசத்தில் உள்ள வாக்கெடுப்பு நிலையத்தில் இந்த கைது இடம்பெற்றுள்ளது.
ஹிக்கடுவை, தெல்வத்தை பிரதேசத்தில் வசிக்கும் 44 வயதுடைய நபரொருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் தெல்வத்தை பிரதேசத்தில் உள்ள வாக்கெடுப்பு நிலையத்திற்குச் சென்று தனது வாக்குச் சீட்டை பெற்றுக் கொண்டுள்ள நிலையில் தனது வாக்கை அடையாளமிட்ட பின்னர் அந்த வாக்குச் சீட்டை புகைப்படம் எடுத்துள்ளார்.



