வாக்களிப்பு நிலையங்களுக்கு தொலைபேசிகளை எடுத்துச் செல்ல தடை!
#SriLanka
#Election
Dhushanthini K
10 months ago

ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு தற்போது ஆரம்பமாகியுள்ளது.
அதன்படி, நாடளாவிய ரீதியில் 13,421 வாக்களிப்பு நிலையங்களில் இன்று காலை 7.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை வாக்களிப்பு நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் நாடளாவிய ரீதியில் உள்ள தேர்தல் நிலையங்களுக்கோ, அல்லது வாக்கு எண்ணும் நிலையங்களுக்கோ கையடக்க தொலைபேசிகளை கொண்டுச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.



