தென்னிலங்கையில் இடம்பெற்ற முகநூல் விருந்து : 14 இளைஞர்கள் கைது!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Dhushanthini K
10 months ago
தென்னிலங்கையில் இடம்பெற்ற முகநூல் விருந்து : 14 இளைஞர்கள் கைது!

முகநூல் விருந்து ஒன்றில் போதைப்பொருள் பாவனையில் ஈடுபட்ட 14 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.  

கம்பஹா, நீர்கொழும்பு மற்றும் ஜால கலால் நிலைய அதிகாரிகளால் நேற்று (16) முன்னெடுக்கப்பட்ட கூட்டு நடவடிக்கையின் போதே குறித்த குழுவினர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

கடவட நகரில் உள்ள ஹோட்டல் ஒன்றில் பேஸ்புக் பார்ட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த விருந்துக்கு பல பிரதேசங்களைச் சேர்ந்த இளைஞர், யுவதிகளும் வருகை தந்திருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. 

விருந்தில் இணைந்த இளைஞர்கள் குழுவொன்று விடுதியில் அறைகளை முன்பதிவு செய்து, அறைகளுக்குள் சட்டவிரோத போதைப்பொருளை பயன்படுத்திய போது கலால் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.  

இந்த இளைஞர்கள் ஐஸ், கொக்கைன் போன்ற போதைப் பொருட்களை பயன்படுத்தியது தெரியவந்தது. கைது செய்யப்பட்ட இளைஞர்கள் 19 முதல் 30 வயதுடையவர்கள் என கலால் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!