பிரான்ஸ் ஜனாதிபதியின் மனைவி குறித்து அவதூறு பரப்பிய இரு பெண்கள்

#France #President #wife
Prasu
1 year ago
பிரான்ஸ் ஜனாதிபதியின் மனைவி குறித்து அவதூறு பரப்பிய இரு பெண்கள்

முதல்பெண்மணி பிரிஜித் மக்ரோன் ஆணாக இருந்து பெண்ணாக மாறியவர் என அவதூறு பரப்பிய இரு பெண்களுக்கு குற்றப்பணம் அறவிடப்பட்டுள்ளது.

ஊடகத்துறையில் பணிபுரியும் இரு பெண்களும் கடந்த 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் யூடியூப் தளமொன்றில் இது தொடர்பில் சில சர்ச்சைக் கருத்துக்களை பதிவு செய்திருந்தனர்.

அதை அடுத்து பிரிஜித் மக்ரோனின் சகோதரர் ஒருவர் கடும் கோபம் கொண்டு இதனைக் கண்டித்ததுடன், அவர்கள் மீது வழக்கும் தொடுத்தனர். இந்நிலையில், அவர்கள் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர். 

பிரிஜித் மக்ரோனுக்கு 8,000 யூரோக்கள் இழப்பீடும், வழக்கு தொடுத்த அவரது சகோதரருக்கு 5,000 யூரோக்களும் குற்றப்பணம் செலுத்த வேண்டும் என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4