மாணவர்களின் மோசமான செயற்பாடு : தற்காலிகமாக மூடப்படும் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம்!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
1 year ago
இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதல் காரணமாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தை இன்று (12.09) மாலை 6.00 மணி முதல் தற்காலிகமாக மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அனைத்து மாணவர்களையும் இன்று மாலை 6.00 மணிக்குள் பல்கலைக்கழக வளாகத்தை விட்டு வெளியேறுமாறு நிர்வாகம் அறிவித்துள்ளது.
மோதலில் ஈடுபட்ட தரப்பினர் அல்லது பல்கலைக்கழகம் எப்போது மீண்டும் தொடங்கப்படும் என்பது தொடர்பான விவரங்களை பல்கலைக்கழக நிர்வாகம் இதுவரை வெளியிடவில்லை.