பிரான்சில் கஞ்சா மற்றும் கொக்கைன் போதைப்பொருட்களுடன் 11 பேர் கைது
#Arrest
#France
#drugs
Prasu
11 months ago

55 கிலோ கஞ்சா மற்றும் 1 கிலோ கொக்கைன் போதைப்பொட்களுடன் 11 பேர் கொண்ட குழு ஒன்றை மார்செய் (Marseille) நகர காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
ஓகஸ்ட் 20 மற்றும் 21 ஆகிய இரு நாட்களும் இந்த போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கை மார்செயின் 14 ஆம் வட்டாரத்தில் இடம்பெற்றுள்ளது.
போதைப்பொருள் தடுப்பு காவல்துறையினர் மேற்கொண்ட சிறப்பு நடவடிக்கையினை அடுத்து 11 பேர் கொண்ட குழுவை அவர்கள் கைது செய்தனர். முதல் நாள் நால்வரும் இரண்டாம் நாள் ஏழு பேரும் கைது செய்யப்பட்டனர்.
மொத்தமாக களி பதத்தில் உள்ள 55 கிலோ கஞ்சாவும், 1 கிலோ எடையுள்ள கொக்கைன் போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்டவர்களில் மூவர் காவல்துறையினரால் நன்கு அறியப்பட்ட போதைப்பொருள் கடத்தல்காரர்கள் எனவும், அவர்கள் தற்போது விசாரணைகளுக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



