தெற்கு கடற்கரையில் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை : 11 பேர் கைது!

#SriLanka #Arrest #drugs #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
1 hour ago
தெற்கு கடற்கரையில் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை : 11 பேர் கைது!

தெற்கு கடற்கரையிலிருந்து ஆழ்கடலில் ஒரு பெரிய அளவிலான போதைப்பொருளை கொண்டு சென்றதாக சந்தேகத்தின் பேரில் 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

அவர்கள் நேற்று  திக்கோவிட்ட மீன்பிடி துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பில் கருத்து வெளியிட்ட கடற்படை ஊடகப் பேச்சாளர் கமாண்டர் புத்திக சம்பத்,  இரண்டு இழுவை படகுகளைக் கண்டுபிடித்து தடுத்து நிறுத்த  நீண்ட தூர கடற்படை கப்பல்களைப் பயன்படுத்தி ஒரு சிறப்பு நடவடிக்கையை மேற்கொண்டதாக  தெரிவித்தார்.

 கைது செய்யப்பட்ட நேரத்தில் ஒரு படகில் ஐந்து பேரும், மறுபடகில் ஆறு பேரும் இருந்ததாகவும், குறித்த படகுகளில்  சுமார் 270 கிலோகிராம் போதைப்பொருள் கொண்டு செல்லப்பட்டதாக சந்தேகிக்கப்படுகிறது. 

 இரண்டு மீன்பிடி படகுகளும் 11 சந்தேக நபர்களும் மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பணியகத்திடம் (PNB) ஒப்படைக்கப்பட உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!