இஞ்சியை அன்றாடம் உணவில் சேர்த்துக்கொண்டால் இவ்வளவு நன்மைகளா?

#Health #Food
Mayoorikka
1 month ago
இஞ்சியை அன்றாடம் உணவில்  சேர்த்துக்கொண்டால் இவ்வளவு நன்மைகளா?

எண்ணற்ற மருத்துவ குணங்களைக் கொண்ட இஞ்சியை நாம் அன்றாடம் உணவில் சேர்த்தக் கொள்கிறோம். இஞ்சியை பச்சையாக சாப்பிடுவதால் உமிழ்நீர் உற்பத்தி அதிகரித்து செரிமானத்திற்கு உதவுவதுடன், குமட்டல் எதிர்ப்பு பண்புகள் உள்ளதால் சாப்பிட்ட பின்பு ஏற்படும் அசௌகரியத்தையும் குறைக்கும்.

 இஞ்சியில் இருக்கும் சேர்மங்கள் உடலில் ஏற்படும் வீக்கங்களைக் குறைக்க உதவுவதுடன், கீல்வாதம் போன்ற பிரச்சனையிலிருந்தும் நன்மை பயக்கும். இஞ்சியில் நிறைந்துள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள், உடலில் நோய் எதிர்ப்பு செயல்பாட்டை அதிகரிப்பதுடன், மழைக்காலத்தில் ஏற்படும் நோய்களை எதிர்த்து போராடவும் உதவுகின்றது.

 மாதவிடாய் சமயத்தில் ஏற்படும் வலியை குறைக்க உதவுவதுடன், கொலஸ்ட்ரால் அளவையும், ரத்த அழுத்தத்தையும் குறைக்கவும் உதவுகின்றது. இஞ்சி உடலில் இரத்த ஓட்டத்தை அதிகப்படுத்தி, இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துவதுடன், புற்றுநோய் எதிர்ப்பு பண்புகள் உள்ளன.

 இஞ்சி மன அழுத்தத்தையும், பதட்டத்தையும் குறைக்க உதவுவதுடன், தொற்றுநோய்களை எதிர்த்துப் போராடவும் உதவுகிறது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!