பற்றியெரியும் நகரங்கள்: தீவிர வலதுசாரிகளால் போர்க்களமாகும் பிரித்தானியா!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
1 year ago
சிறார்கள் மூவர் கொல்லப்பட்ட சம்பவத்தை அடுத்து தீவிர வலதுசாரிகளால் முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட்டம் மற்றும் வன்முறை சம்பவங்களால் பிரித்தானியா போர்க்களமாக மாறியுள்ளது.
பல்வேறு நகரங்களில் தீவிர வலதுசாரிகள் மேற்கொண்ட ஆர்ப்பாட்டங்களில் வன்முறை வெடித்ததால் 90க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வன்முறையில் ஈடுபடும் தீவிர வலதுசாரிகளுக்கு எதிரான நடவடிக்கையை பொலிசார் தொடர்ந்து முன்னெடுப்பார்கள் என்றே பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் எச்சரித்துள்ளார்.
மேலும், எந்தவொரு வன்முறைக்கும் மன்னிப்பு இல்லை என்பதை குறிப்பிட்ட பிரதமர் ஸ்டார்மர், நமது தெருக்களைப் பாதுகாப்பாக வைத்திருக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க காவல்துறைக்கு அரசாங்கம் ஒத்துழைக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.