மெதுவா படிச்சுட்டு சிரிச்சுட்டு படுங்க நிம்மதியா தூக்கம் வரும்!

#Lifestyle #life
Mayoorikka
2 months ago
மெதுவா படிச்சுட்டு சிரிச்சுட்டு படுங்க நிம்மதியா தூக்கம் வரும்!

1. உலகத்திலேயே சிறந்த ஜோடி செருப்புதான்... ஒன்றை பிரிந்தால் மற்றொன்று வாழவே வாழாது..!

 2. எல்லா பெண்களையும் விசிலடித்து திரும்பி பார்க்க வைத்தாலும் செருப்படி வாங்காத ஒரே ஜீவன் குக்கர் தான்..!

 3. மாமா பொண்ணும், உப்புமாவும் ஒன்னு! வேற எதுவுமே கிடைக்காத பட்சத்துல நம்மளோட தலையில கட்டப்படும்! 

 4. நிம்மதியாக இருக்கும் வயதில் மனைவியைத் தேடுவதும், மனைவி வந்தப்பின் நிம்மதியைத் தேடுவதுமே.. ஆண்களின் வாழ்க்கை தேடல்..!

 5. இந்த உலகத்தில் என்னையும் ஒரு மனிதனாக மதித்து பொன்னாடை போர்த்தும் ஒரே நபர்.. சலூன் கடைக்காரர் மட்டுமே..! 

"நீங்க வெட்டுங்க பாஸ்.."..!! .

 6. ஒரு புடவை வாங்க முன்னூறு புடவைகளைப் புரட்டிப் பார்த்த மனைவியிடம் எரிச்சலுடன் கணவன் சொன்னான்: "ஆதிகாலத்தில் ஏவாள் வெறும் இலையை மட்டுமே உடுத்தி இருந்தாள். இது போன்ற தொல்லைகள் நல்ல வேளை ஆதாமுக்கு இல்லை."

 இதற்கு மனைவி சொன்ன பதில்: "அதுக்கு அவன் எத்தனை மரம் ஏறி இறங்கினானோ?"

 7. தொலைபேசியில் ஒரு பதற்றமான குரல்.. "டேய் மச்சான்... எங்கடா இருக்க?" "வீட்லதான்டா இருக்கேன்..." "அப்பாடா... இப்பதான்டா நிம்மதியா இருக்கு...!!" 

 "ஏன்டா? என்ன விஷயம்??" "அதில்லடா..... காலையில பேப்பரை பார்த்தேன். அதுல, உங்க தெருவுல வெட்டியா சுத்திகிட்டிருந்த நாய்களை எல்லாம் கார்பரேசன்காரங்க புடிச்சுட்டு போனதா செய்தி போட்டிருந்துச்சு. 

அதான்... எங்க நீ மாட்டிகிட்டீயோன்னு பயந்தே போயிட்டேன்....." 8. அம்மா: என்னடி உன் புருஷன் தினமும் இப்படி குடிச்சுட்டு வராரே நல்லாவா இருக்கு.?

 மகள் : தெரியலை அம்மா நான் இன்னும் டேஸ்ட் பண்ணி பார்க்கலை! 9. நீ என் தங்கக் குட்டியாம்… தாத்தா சொல்றதைக் கேப்பியாம்… நான் உன் புத்தகப் பையைத் தூக்கிட்டு வருவேனாம்…. பாப்பா நடந்து வருவியாம். வேண்டாம் தாத்தா… என் பையைத் தூக்கி நீ கஷ்டப்பட வேணாம். நானே என் பையைத் தூக்கிக்கிறேன். நீ என்னைத் தூக்கிக்கிட்டு வந்தாப் போதும்… 

 10. “ஏன் ஸ்கூட்டரை திருடினே…?” “டிராபிக் போலீஸ்காரர்தாங்க சீக்கிரம் வண்டிய எடு, வண்டிய எடுன்னு அவசரப்படுத்தினாரு எசமான்..!”

 11. பகல்ல உங்களுக்குக் கண் தெரியாதா டாக்டர்….?” “தெரியுமே…ஏன் கேட்கறீங்க….. ?” “இல்ல…பார்வை நேரம் மாலை ஆறிலிருந்து எட்டுவரைன்னு போர்டு வெச்சிருக்கீங்களே… அதான் கேட்டேன்.!” 12. முதலாளி: டேய் முனியா, நான் கொஞ்சம் வீட்டுக்குப்‌போய் ஓய்வு எடுத்துக்கிட்டு வர்றேன்… 

நீ கடையைப் பார்த்துக்க… முனியன்: உங்களுக்கு எதுக்கு சிரமம் முதலாளி? நானே போய் ஓய்வை எடுத்துக்கிட்டு வந்துடறேனே!

 13. டீச்சர் கேட்டார்... பார்வதி ஏன் சிவபெருமானை மணந்தார் ? குறும்புக்கார மாணவனின் பதில்... எப்பவும் தலையில் சந்திரன் இருப்பதால் வெளிச்சமாக இருக்கும்... EB பில் வராது..!! ஜடாமுடியிலிருந்து கங்கை நதி கொட்டுவதால் மோட்டார் போட்டு டேங்க்கில் தண்ணீர் ஏற்ற வேண்டாம்..

! சிவன் பச்சை காய்கறி சாப்பிடுவதால் சமைத்து கொட்ட வேண்டாம்..! சிவனுக்கு அம்மா அப்பா இல்லாததால் மாமியார் தொல்லை இல்லை... மாணவனின் பதிலை கேட்டு மயங்கி விழுந்த டீச்சர் எழுந்திருக்கவேயில்லை. 14. ஜட்ஜ் : நீங்க ரொம்ப வேகமா வண்டி ஓட்டியதா போலீஸ் சொல்லுறாங்க?‌‌ நீங்க இல்லேன்னு சொல்லுறேங்க! 

இதுக்கு ஆதாரம் ஏதாவது உண்டா? ஐயா நான் என் பொண்டாட்டிய கூட்டிட்டு வர மாமனாரு வீட்டுக்கு போய்கிட்டு இருந்தேன்யா! நீங்களே சொல்லுங்கய்யா எவனாவது பொண்டாட்டிய வீட்டுக்கு கூட்டிட்டு வர வேகமா போவானா... ? ஜட்ஜ் : கேஸ் டிஸ்மிஸ்ட்...! முதல்ல அவரை விடுதலை செய்ங்க...! 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!