ஈலிங் ஸ்ரீ கனகதுர்க்கை அம்மன் ஆலய வருடாந்த மகோற்சம்!
#Temple
#London
Mayoorikka
9 months ago

லண்டன் ஈலிங் கனகதுர்க்கை அம்மன் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் கொடியேற்ற திருவிழா 19.07.2024 வெள்ளிக்கிழமை ஆரம்பமாகவுள்ளது.
தொடர்ந்து 25 நாட்கள் மகோற்சவ பெருவிழா வெகு சிறப்பாக இடம்பெறவுள்ளது.
மகோற்சவத்தின் போது அடியவர்கள் அனைவரும் ஆலயத்திற்கு வருகை தந்து அம்பாளின் அருளை பெற்றுச் செல்லுமாறு ஆலய அறங்காவலர்கள், நிர்வாகத்தினர், சிவாச்சாரியார்கள் மற்றும் உபயகாரர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
லண்டன் ஶ்ரீ கனகதுர்க்கை அம்மன் ஆலயமானது தாயகத்தில் உள்ள வறிய மக்களுக்கு பல்வேறுபட்ட நிவாரண உதவிகளை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.



