இரா.சம்பந்தன் அவர்களின் பூதவுடல் அக்கினியுடன் சங்கமித்தது!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
1 year ago
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அமரர் இராஜவரோதயம் சம்பந்தனின் பூதவுடன் இன்று மாலை அக்கினியுடன் சங்கமமானது.
அன்னாரின் பூதவுடல், மக்களின் அஞ்சலிக்காக திருகோணமலையில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, பின்னா் திருகோணமலை இந்து மயானத்தில் தகனக் கிாியைகளுக்காக எடுத்துச் செல்லப்பட்டது.
சம்பந்தனின் இறுதி அஞ்சலி நிகழ்வில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட தென்னிலங்கையைச் சேர்ந்த அரசியல் பிரமுகர்கள், வடகிழக்கு மற்றும் மலையகத்தைச் சேர்ந்த மக்கள் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்ட நிலையில் பாதுகாப்பு நடவடிக்கைகளை பலப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.