உத்தியோகபூர்வ விஜயமாக சிங்கப்பூர் செல்லும் அலி சப்ரி!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Thamilini
1 year ago
உத்தியோகபூர்வ விஜயமாக சிங்கப்பூர் செல்லும் அலி சப்ரி!

வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி உத்தியோகபூர்வ விஜயமாக சிங்கப்பூர் செல்ல உள்ளார். அதன்படி, இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமாக வெளிவிவகார அமைச்சர் நாளை (07) சிங்கப்பூர் செல்கிறார்.  

சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சர் டாக்டர் விவியம் பாலகிருஷ்ணனின் அழைப்பின் பேரில் அவர் அங்கு செல்லவுள்ளார். 

இரு நாடுகளுக்கும் இடையிலான பன்முக உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் இந்த விஜயத்தின் போது வெளிவிவகார அமைச்சர் சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சருடன் இருதரப்பு கலந்துரையாடல்களில் ஈடுபடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

நாளையும் நாளை மறுநாளும் பல தரப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்தும் வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி, ஜூலை 9ஆம் திகதிசிங்கப்பூரில் நடைபெறவுள்ள "2024 ராய்ட்டர்ஸ் நெக்ஸ்ட் ஆசிய பசிபிக் மாநாட்டில்" பங்கேற்க உள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!