கோலாலம்பூர் விமான நிலையத்தில் ரசாயனக் கசிவு - ஊழியர்கள் பாதிப்பு
#Airport
#Accident
#Malasia
#Chemical
#Workers
Prasu
1 year ago

மலேசியாவின் கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தின் விமானப் பொறியியல் கட்டடத்தில் ரசாயனக் கசிவு ஏற்பட்டதை அடுத்து 20 ஊழியர்கள் பாதிக்கப்பட்டனர்.
இந்தச் சம்பவம் ஜூலை 4ஆம் திகதியன்று நிகழ்ந்தது. சிப்பாங் விமானப் பொறியியல் கட்டடத்தில் ரசாயனக் கசிவு ஏற்பட்டது தொடர்பாக தகவல் கிடைத்தது என்று சிலாங்கூர் தீயணைப்புத் துறை தெரிவித்தது.
ரசாயனக் கசிவு காரணமாக விமானச் சேவைகள், விமான நிலையப் பணிகள் பாதிப்படையவில்லை என்று சிலாங்கூர் தீயணைப்புத் துறை கூறியது.
பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்குத் தலைசுற்றல் ஏற்பட்டதாகவும் மருத்துவ சிகிச்சை பெற அவர்கள் அனுப்பிவைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இந்தச் சம்பவம் காரணமாகப் பொதுமக்களுக்கு எவ்வித அபாயமும் இல்லை என்று செய்தி நிறுவனத்திடம் சிலாங்கூர் தீயணைப்புத் துறை கூறியது



