ஒரு வருட பேச்சுவார்த்தை : இலங்கைக்கு கிடைக்கப்பெற்ற மற்றுமோர் நன்மை!

இலங்கை மற்றும் சர்வதேச கடன் வழங்குநர்கள் பத்திர மறுசீரமைப்பு விதிமுறைகள் குறித்து உடன்படிக்கைக்கு வந்துள்ளனர்.
இது தொடர்பான இணக்கப்பாடு நேற்று (03.07) எட்டப்பட்டதாக ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.
இதன்படி 12.5 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான சர்வதேச பத்திரங்களை மறுசீரமைப்பது தொடர்பில் இணக்கம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஒரு வருடத்திற்கும் மேலாக நடைபெற்ற பேச்சுவார்த்தையின் பின்னர் இந்த உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தொண்ணூறு சர்வதேச பத்திரங்களில் 28 சதவீத பெயரளவு குறைப்புக்கு கடன் வழங்குநர்கள் ஒப்புக்கொண்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
சர்வதேச பத்திர மறுசீரமைப்பு என்பது சர்வதேச நாணய நிதியத்தால் இலங்கைக்கு வழங்கப்பட்ட ஒரு முக்கிய நிபந்தனையாகும்.
கடன் மறுசீரமைப்பு செயல்முறைக்காக இருதரப்பு கடன் வழங்குநர்களுடன் இலங்கை ஏற்கனவே ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது.
இதற்கிடையில், 2024 ஆம் ஆண்டிற்கான பரவலாக்கப்பட்ட பட்ஜெட் திட்டத்தின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து திட்டங்களும் ஆகஸ்ட் 31 க்கு முன் முடிக்கப்பட வேண்டும் என்று நிதி, ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சகம் கூறுகிறது.
அமைச்சின் செயலாளரினால் சுற்றறிக்கை மூலம் இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.



