ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிட்ட விமானச் சேவைகள் அமைச்சர்
#SriLanka
#Minister
#AirCraft
#Airlines
Prasu
1 year ago

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விற்பனை செய்யப்படவில்லை, மாறாக மறுசீரமைப்பு பணிகள் மாத்திரமே மேற்கொள்ளப்பட்டு வருவதாக விமானச் சேவைகள் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் 49% மட்டுமே வேறொரு நிறுவனத்திற்கு வழங்க முடியும் என்றும், அதற்காக இதுவரை எந்த நிறுவனமும் முன்வரவில்லை என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று(03) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா இதனைத் தெரிவித்தார்.
இலங்கை சட்டத்தின்படி ஸ்ரீலங்கன் விமான சேவையில் 49% மட்டுமே வேறு நிறுவனத்திற்கு வழங்க முடியும்.
அதற்கும் சர்வதேச அளவில் குறைந்தபட்ச ஆர்வமே உள்ளது.



