யாழில் தீயில் எரிந்து உயிரிழந்த நபரின் மரணம் தொடர்பில் ஒருவர் கைது!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Dhushanthini K
1 year ago
யாழில் தீயில் எரிந்து உயிரிழந்த நபரின் மரணம் தொடர்பில் ஒருவர் கைது!

யாழ்ப்பாணம் - மருதங்கேணி பகுதியில் தீயில் எரிந்து மரணமான சரவணபவானந்தம் சிவகுமாரின்  மரணம் தொடர்பில் பெண் ஒருவர் நேற்று (02.07) சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்டுள்ளார்.  

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது கடந்த 20 திகதி தனது வத்திராயனில் வசித்த வீடு ஒன்றில் இரவு வேளை தீக்காயங்களுக்கு உள்ளான நிலையில் அவர் ஓலமிட்ட போது மக்களால் மீட்கப்பட்டு மருத்துவ மனைக்கு அனுப்பப்பட்டு அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் திங்கட்கிழமை இரவு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் மரணமடைந்தார். 

இந்நிலையில் அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் எனும் சந்தேகத்தின் பெயரில் பெண் ஒருவர் நேற்று செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.  

கைது செய்யப்பட்ட பெண்மணியிடம் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வரும் மருதங்கேணி பொலிஸார் அவரை நீதிமன்றத்தில் முற்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவருகின்றனர்.  

தீக்காயங்களுக்கு உள்ளான சரவணபவானந்தம் சிவகுமார் 44 வயதுடைய மூன்று பிள்ளைகள் தந்தை ஆவார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!