எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலில் தீ விபத்து : விசாரணையை இடைநிறுத்த உத்தரவு!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Dhushanthini K
1 year ago
எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலில் தீ விபத்து :  விசாரணையை இடைநிறுத்த உத்தரவு!

எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலில் தீ விபத்து தொடர்பில் கப்பலின் கப்டன் மற்றும் உள்ளூர் பிரதிநிதி நிறுவனத்தின் பணிப்பாளர்களுக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் விசாரணையை இடைநிறுத்தி உயர்நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது.  

Express Pearl கப்பலின் உள்ளூர் பிரதிநிதி நிறுவனமான C Consortium Lanka கம்பனியின் பணிப்பாளர்களுக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் சட்டவிரோதமானது எனத் தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உயர் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. 

இந்த மேல்முறையீட்டு மனு ஏ.எச்.எம்.டி. நவாஸ், குமுதுனி விக்கிரமசிங்க மற்றும் பிரியந்த பெர்னாண்டோ ஆகிய மூவரடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.  

மனுதாரர் நிறுவனம் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி சரத் ஜயமான்ன உள்ளிட்ட சட்டத்தரணிகள், இந்த வழக்கில் கேப்டன் மற்றும் உள்ளூர் பிரதிநிதிகள் நிறுவனத்தின் பணிப்பாளர்களுக்கு எதிராக குற்றஞ்சாட்டுவது சட்டத்திற்கு முரணானது என நீதிமன்றில் தெரிவித்திருந்தனர்.  

இதையடுத்து, மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை பிப்ரவரி 17ம் திகதிக்கு  ஒத்திவைக்கப்பட்டது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!