ஜனாதிபதித் தேர்தலுக்கு தடை கோரி மனு தாக்கல்!
#SriLanka
#Election
Mayoorikka
1 year ago

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பதவி காலம் தொடர்பில் தெளிவூட்ட வேண்டுமெனக் கோரி உயர்நீதிமன்றத்தில் புதன்கிழமை (03) மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அரசியலமைப்புக்கு அமைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பதவிக்காலத்தை தெளிவூட்டவேண்டுமென உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவின் ஊடாக கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த மனு, வர்த்தகரான சீ.டிலெவனவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அரசியலமைப்பின் பிரகாரம் தற்போதைய ஜனாதிபதியின் பதவிக்காலம் தொடர்பில் உயர்நீதிமன்றம் தெளிவூட்டும் வரை, அடுத்த ஜனாதிபதித் தேர்தலை நடாத்துவதற்கு இடைகால தடை விதிக்குமாறு மனுதாரர் கோரிக்கை விடுத்துள்ளார்.



