நயினாதீவிற்கு பயணித்த படகு விபத்து: ஒருவர் உயிரிழப்பு
#SriLanka
#Jaffna
#Accident
Mayoorikka
1 year ago

குறிகட்டுவானிலிருந்து நயினாதீவிற்கு பயணித்த படகொன்று கவிழ்ந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். நயினாதீவிற்கு கருங்கற்களை படகில் ஏற்றிச் சென்ற போது நேற்று இரவு 7.00 மணியளவில் இந்த இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
விபத்தின் போது படகில் நான்கு பேர் பயணித்துள்ளதுடன் அவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளார். ஏனைய 3 பேரையும் அப்பகுதி மக்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.
உயிரிழந்தவர் புங்குடுதீவு பகுதியைச் சேர்ந்த 42 வயதுடையவர் எனவும், சடலம் பிரேத பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
ஊர்காவற்துறை மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



