அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து செயற்பட அழைப்பு!

#SriLanka #Sri Lanka President
Mayoorikka
1 year ago
அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து செயற்பட அழைப்பு!

நாடுதொடர்பிலும் நாட்டு மக்கள் தொடர்பிலும் சிந்தித்து, அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து செயற்பட முன்வரவேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.

 காலியில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். பொருளாதார நெருக்கடியில் இருந்து மக்களை மீட்டெடுத்த தேசிய தலைவர் தற்போதைய ஜனாதிபதி.

 நாடு நெருக்கடியை எதிர்நோக்கிய போது எவரும் நாட்டை பொறுப்பேற்க முன்வராத சந்தர்ப்பத்தில் பாரிய சவாலுக்கு மத்தியில் நாட்டை பொறுப்பேற்று மக்களை நெருக்கடியில் இருந்து மீட்டெடுத்தவர்.

 எனவே நாடு தொடர்பிலும் மக்கள் தொடர்பிலும் சிந்தித்து அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து செயற்பட முன்வரவேண்டும்.

 ஜனாதிபதி முன்னெடுத்துவரும் பொருளாதார அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்கு ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்கள் மாத்திரமன்றி நாட்டின் ஏனைய கட்சி உறுப்பினர்களும் ஒத்துழைப்பு வழங்கி செயற்படுகின்றனர் என வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!