நாட்டின் பல பகுதிகளில் இடம்பெற்ற விபத்துக்களில் மூவர் பலி!

நாட்டின் பல பகுதிகளில் இடம்பெற்ற வீதி விபத்துக்களில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.
கபிதிகொல்லேவ பதவிய வீதியில் மோட்டார் சைக்கிள் ஒன்று சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி கால்வாயில் வீழ்ந்ததில் அட்டவீரகொல்லேவ பிரதேசத்தைச் சேர்ந்த 57 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஹெட்டிபொல மடுல்ல வீதியின் ரம்பேவ பிரதேசத்தில் மோட்டார் சைக்கிள் ஒன்று மின்கம்பத்துடன் மோதிய விபத்தில் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார். ஹெட்டிபொல சுனந்தபுர பகுதியைச் சேர்ந்த 46 வயதான ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இதேவேளை, நீர்கொழும்பு - உஸ்வதகேயாவ வீதியில் அலனேகொட பிரதேசத்தில் பயணித்த பாதசாரி பெண் ஒருவர் லொறியில் மோதி உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் பமுனுகம பிரதேசத்தைச் சேர்ந்த 71 வயதுடையவர் எனவும், விபத்து தொடர்பில் லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.



