ஐரோப்பாவில் தீவிரவாத தாக்குதல் அச்சம் : உஷார் நிலையில் அமெரிக்கா இராணுவ தளங்கள்!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
1 year ago
ஐரோப்பாவில் நிறுவப்பட்டுள்ள பல அமெரிக்க ராணுவ தளங்களை உஷார் நிலையில் வைக்க அமெரிக்கா நடவடிக்கை எடுத்துள்ளது.
தீவிரவாத தாக்குதல் அபாயம் கருதி இவ்வாறான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதனால் அவர்களுக்கு இரண்டாம் நிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன் சுமார் 10 வருடங்களின் பின்னர் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
எச்சரிக்கை விடுத்துள்ள இராணுவ தளங்களில் ஜேர்மனியின் ஸ்டட்கார்ட் தளம் மற்றும் இத்தாலியின் அவியானோ விமானப்படை தளமும் உள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.