அமெரிக்காவில் பொலிஸார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் குழந்தை உயிரிழப்பு!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Thamilini
1 year ago
அமெரிக்காவில் பொலிஸார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் குழந்தை உயிரிழப்பு!

அமெரிக்காவில் நியூயார்க் மாநில காவல்துறை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 வயது குழந்தை உயிரிழந்துள்ளது. 

 பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் குழந்தையின் கையில் துப்பாக்கி இருப்பதாக நினைத்து அவரை சுட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். ஆனால் அது ஒரு பொம்மை துப்பாக்கி எனத் தெரிவிக்கப்படுகிறது. 

உட்டிகா பகுதியில் கடந்த சில நாட்களாக திருட்டு சம்பவங்கள் நடப்பதாக முறைப்பாடுகள் வந்ததாகவும், இதன் காரணமாக போலீசார் குவிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. 

 Nyah Mway என்ற குழந்தை தனது தோழியுடன் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த போது, ​​அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி விசாரித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து குறிந்த  குழந்தையும் ஒரு போலீஸ்காரரும் தரையில் சண்டையிட்டனர். மற்றைய அதிகாரி சுடப்பட்டார். துப்பாக்கிச் சூடு குழந்தையின் மார்பில் பாய்ந்ததால், மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட  நிலையில் குழந்தை உயிரிழந்துள்ளது. 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!