நேபாளத்தில் கனமழை மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி 9 பேர் பலி

#Death #Flood #HeavyRain #Nepal
Prasu
1 year ago
நேபாளத்தில் கனமழை மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி 9 பேர் பலி

நேபாள நாட்டில் பருவமழை தொடங்கியதில் இருந்து அங்கு கனமழை பெய்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக நிலச்சரிவுகளும் ஏற்பட்டு வருகின்றன. 

கனமழை மற்றும் மின்னல் தாக்குதலும் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில், கனமழை மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி 9 பேர் பலியாகி உள்ளனர் என தகவல் தெரிவிக்கின்றது.

இதில் 3 குழந்தைகளும் அடங்குவர். மேலும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் நிலச்சரிவில் பலியானது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

கனமழையால் ஏற்படும் நிலச்சரிவுகளால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை மற்றும் சுற்றுச்சூழலுக்கு பெரிய அளவில் பாதிப்பு ஏற்படுகிறது.

 நேபாளத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 9 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் பல லட்சம் பேர் பருவகாலத்தின்போது ஏற்படும் மழை தொடர்பான சம்பவங்களால் பாதிக்கப்படுகின்றனர் என தேசிய பேரிடர் மேலாண் கழகம் தெரிவித்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!