மட்டக்களப்பில் அநுர குமார திசாநாயக்க பங்கேற்கும் இரு முக்கிய மாநாடு
#Batticaloa
#Sri Lanka Teachers
#Meeting
#AnuraKumaraDissanayake
Prasu
1 year ago

தேசிய மக்கள் சக்தியின் தலைவர் தோழர் அநுர குமார திசாநாயக்க நாளைய தினம் (27) மட்டக்களப்பில் இடம்பெறவுள்ள ஆசிரியர் சேவை சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட மாநாட்டிலும், தேசிய மக்கள் சக்தியின் வங்கி மற்றும் நிதித்துறை நிறுவனங்களின் மட்டக்களப்பு மாவட்ட மாநாட்டிலும் பங்கேற்கவுள்ளார்.
ஆசிரியர் சேவை சங்கத்தின் மட்டக்களப்பு மாநாடு நாளை (27) பிற்பகல் 2.00 மணிக்கு மட்டக்களப்பு வில்லியம் ஓல்ட் மண்டபத்திலும், தேசிய மக்கள் சக்தியின் வங்கி மற்றும் நிதித்துறை நிறுவனங்களின் மட்டக்களப்பு மாவட்ட மாநாடு பிற்பகல் 6.00 மணிக்கு கோல்டன் ரிவர் ஹோட்டலிலும் ஆரம்பமாகவுள்ளது



