கின்னஸ் புத்தகத்திலும் இடம்பிடித்த அதிக முடி கொண்ட குடும்பம்
#Hair
#Mexico
#WorldRecord
Prasu
7 months ago

உலகில் அதிக முடி கொண்ட குடும்பத்தின் உறுப்பினர்களை சிலர் பேஸ்புக் தளத்தில் கேலி செய்த நிலையில், தற்போது அந்த குடும்பத்திற்கு ஆதரவான கருத்துக்களை பலர் தெரிவித்து வருகின்றனர்.
மெக்ஸிகோவைச் சேர்ந்த குடும்பம் ஒன்று மிகவும் அரிதான மரபணு நோயால் பாதிக்கப்பட்டுள்ளது.
அதாவது ஹைபர்டிரிகோசிஸால் (CGH) என அழைக்கப்படும் நோயால் இவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் பிறக்கும்போதே முகம் மற்றம் தாடை பகுதிகளில் அதிகளவிலான முடியுடன் பிறக்கிறார்கள்.
நாளடைவில் அவை உடல் முழுவதும் வியாபிக்கின்றது.
இந்த நோயால் விக்டர் “லாரி” கோம்ஸ், கேப்ரியல் “டேனி” ராமோஸ் கோம்ஸ், லூயிசா லிலியா டி லிரா ஏசிவ்ஸ் மற்றும் ஜீசஸ் மானுவல் ஃபஜார்டோ ஏசிவ்ஸ் ஆகியோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.



