லைக்காவுக்கு பிரித்தானியாவில் பாரிய நெருக்கடி!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Dhushanthini K
1 year ago
லைக்காவுக்கு பிரித்தானியாவில் பாரிய நெருக்கடி!

பிரித்தானியாவின் பிரபலமான தொலை தொடர்பு நிறுவனமான Lycomobile இன் கடன் மற்றும் கணக்கு வழக்குகள் காரணமாக கணக்காய்வாளர்கள் கையொப்பமிட மறுப்பு தெரிவித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஏறக்குறைய  £105 மில்லியனுக்கும் தொடர்புடைய கணக்குகள் தொடர்பில் இந்நிறுவனம் இங்கிலாந்து வரி அதிகாரிகளால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. 

அத்துடன் மோசடி செய்ததற்காக லைகாமொபைல் மீது பிரெஞ்சு அதிகாரிகளால் வழக்கு தொடரப்பட்டது.

இது தொடர்பான விரிவான விளக்கங்கள் பைனான்சியல் டைம்ஸ் செய்தித்தாளில் வெளியிடப்பட்டுள்ளது.

இலங்கை தமிழரான அல்லிராஜா சுபாஸ்கரனுக்கு சொந்தமான குறித்த நிறுவனத்தால் கடந்த நிதியாண்டில் 25 மில்லியன் பவுண்ட்ஸ் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். 

இந்த குற்றச்சாட்டு லைகா மொபைலுக்கான ஒரு பின்னடைவாக பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!