இமயமலைப் பகுதியில் வேன் ஒன்று ஆற்றில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 16 பேர் பலி
#Death
#Accident
#vehicle
#River
#Himalayas
Prasu
1 year ago

காஷ்மீரின் சர்ச்சைக்குரிய இமயமலைப் பகுதியில் மலைப் பாதையில் இருந்து வேன் ஒன்று ஆற்றில் விழுந்து விபத்துக்குள்ளாகியது.
இதில் 16 பேர் உயிரிழந்துள்ளனர். பெரும்பாலான குழந்தைகள் காயமடைந்துள்ளதாக என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் நீலம் பள்ளத்தாக்கில் நடந்ததாக பேரிடர் மேலாண்மை ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை ஆறு உடல்களை நீர்மூழ்கிக் குழுவினர் கண்டுபிடித்துள்ளதாகவும், மற்ற உடல்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.



