கிளிநொச்சியில் பொலிஸ் வாகனத்தில் பாடசாலை சென்ற மாணவர்கள்
                                                        #SriLanka
                                                        #School
                                                        #Police
                                                        #Student
                                                        #Kilinochchi
                                                        #vehicle
                                                    
                                            
                                    Prasu
                                    
                            
                                        1 year ago
                                    
                                பாடசாலை மாணவர்களை பேருந்துகள் ஏற்றாமல் பயணிப்பதால் மாணவர்கள் பொலிஸ் வாகனத்தில் பாடசாலை சென்ற சம்பவம் பதிவாகியுள்ளது.
கிளிநொச்சி மாவட்டத்தின் முகமாலை பகுதியில் குறித்த சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது.
பேருந்துகள் மாணவர்களை ஏற்றி செல்லாத சம்பவம் தொடர்ச்சியாக பதிவாகி வரும் நிலையில், இன்றைய தினம் பொலிசார் தமது வாகனத்தில் மாணவர்களை ஏற்றிச் சென்று பாடசாலையில் விட்டுள்ளனர்.
 கடந்த சில மாதங்களிற்கு முன்னர், பெற்றோர் ஒருவர் பேருந்துக்கு குறுக்காக மோட்டார் சைக்கிளை நிறுத்தி பாடசாலை மாணவர்களை ஏற்றி அனுப்பிய சம்பவமும் குறித்த பகுதியில் இடம்பெற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது