ஈரான் ஜனாதிபதி பயணித்த ஹெலி விபத்துக்குள்ளான இடம் கண்டுபிடிப்பு! உயிர் தப்புவதற்கான அறிகுறி இல்லை

#world_news #President #Iran
Mayoorikka
1 year ago
ஈரான் ஜனாதிபதி பயணித்த ஹெலி விபத்துக்குள்ளான இடம் கண்டுபிடிப்பு! உயிர் தப்புவதற்கான அறிகுறி இல்லை

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி உள்ளிட்டவர்கள் பயணித்த ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளான இடத்தை மீட்பு குழுவினர் கண்டுபிடித்துள்ளதாக அந்த நாட்டின் அரசு தொலைக்காட்சி செய்தி வௌியிட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

 ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் ஹெலிகாப்டரில் இருந்து உயிர் தப்புவதற்கான "அடையாளம் எதுவும் இல்லை" என்று அரசு தொலைக்காட்சி கூறுகிறது. ஈரானிய அதிகாரியை மேற்கோள் காட்டி, விபத்தில் ஹெலிகாப்டர் "முற்றிலும் எரிந்துவிட்டது" என்றும் ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

 "விபத்தில் ஜனாதிபதி ரைசியின் ஹெலிகாப்டர் முற்றிலும் எரிந்தது... துரதிர்ஷ்டவசமாக, அனைத்து பயணிகளும் இறந்துவிட்டதாக அஞ்சப்படுகிறது," என்று அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!