இஸ்ரேலின் தாக்குதலில் 148 ஊடகவியலாளர்கள் பலி!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
1 year ago
காஸா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் இதுவரை 148 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
அந்நாட்டு சுகாதார மற்றும் ஊடகத்துறை அதிகாரிகள் மேற்கொண்ட கணக்கீட்டில் இந்தத் தகவல்கள் வெளியாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அவர்களில் பல வெளிநாட்டு ஊடகவியலாளர்களும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.
காஸா பகுதியில் உடனடியாக போர்நிறுத்தம் கோரி ஐ.நா பாதுகாப்பு சபையில் தீர்மானங்கள் முன்வைக்கப்பட்ட போதிலும் இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதாக வெளிநாட்டு செய்திகள் மேலும் குறிப்பிட்டுள்ளன.