சிங்கப்பூரில் முடிவுக்கு வரும் மிகப் பெரிய அத்தியாயம் : பதவியை இராஜினாமா செய்கிறார் லீ சியன் லூங்!
#SriLanka
#Singapore
#sri lanka tamil news
Dhushanthini K
1 year ago

சிங்கப்பூரை மிக நீண்ட காலம் ஆட்சி செய்த பிரதமர் "லீ சியன் லூங்" தனது பதவியை ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளார்.
அவர் பதவி விலகும்போது, நாட்டின் அரசியலில் ஒரு அத்தியாயம் முடிவுக்கு வரும் என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
சிங்கப்பூரை இருபது ஆண்டுகள் ஆட்சி செய்த லீ இன்று இரவு தனது அதிகாரங்களை அந்நாட்டின் துணைப் பிரதமரும் நிதி அமைச்சருமான லாரன்ஸ் வோங்கிடம் ஒப்படைப்பார்.
சிங்கப்பூர் 1965 இல் சுதந்திர நாடானது. அதன்பிறகு 59 ஆண்டுகளில் மூன்று பிரதமர்கள் மட்டுமே நாட்டை ஆட்சி செய்துள்ளனர்.



