வாகன இறக்குமதியை மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கை : இராஜாங்க அமைச்சரின் விசேட அறிவிப்பு!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Dhushanthini K
1 year ago

வாகன இறக்குமதியை அடுத்த வருடம் முதல் மீண்டும் ஆரம்பிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
அநுராதபுரத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த இராஜாங்க அமைச்சர், மேற்படி கூறியுள்ளார்.
இது தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களுக்கு வாகனங்களை இறக்குமதி செய்ய அரசாங்கம் அனுமதி வழங்குவதில்லை.
இதுவரை வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான அனுமதி வணிகத் தேவைகளுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது, அதாவது பொருளாதார செயல்முறை மற்றும் வணிக செயல்முறையை நாடுபவர்கள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.
இறக்குமதிக்கு ஒரு வரம்பு இருந்தால், எதிர்காலத்தில் அந்த கட்டுப்பாடு தளர்த்தப்படும் .
நாட்டில் தற்போதுள்ள பொருளாதார வேலைத்திட்டத்தை தவிர வேறு வழியில்லை” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.



