ஆப்கானிஸ்தான் கனமழை - 200 பேர் உயிரிழப்பு

#Death #Afghanistan #Flood #HeavyRain #Rescue
Prasu
1 year ago
ஆப்கானிஸ்தான் கனமழை - 200 பேர் உயிரிழப்பு

ஆப்கானிஸ்தான் நாட்டின் வடக்கு மாகாணமான பாக்லானில் நேற்று பெய்த கனமழையில் 200 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 

கனமழை காரணமாக ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் சேதம் அடைந்துள்ளதாக புலம்பெயர்ந்தோர்களுக்கான ஐநா0வின் சர்வதேச அமைப்பு தெரிவித்துள்ளது.

பாக்லானி ஜாதித் மாவட்டத்தில் மட்டும் 1500 வீடுகள் சேதம் அடைந்துள்ளது. 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

ஆனால் தலிபான் அரசு 62 பேர் உயிரிழந்ததாக நேற்றிரவு தெரிவித்திருந்தது. ஆப்கானிஸ்தானின் பல்வேறு மாகாணங்கள் மழையால் பாதிக்கப்பட்டுள்ளது. தகார் மாகாணத்தில் 20 பேர் உயிரிழந்துள்ளனர்.

வடகிழக்கு மாகாணம் பாதாக்ஷன், மத்திய கோர் மாகானாம், மேற்கு ஹெராத் ஆகியவையும் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ளன.

 கடும் வறட்சி தொடர்பான அமைப்பைக் கொண்ட ஆப்கானிஸ்தான், கனமழையை எதிர்கொள்ள முடியாமல் திணற வேண்டிய நிலை ஏற்பட்டது. பருவகால மாற்றம் காரணமாக மிகவும் பாதிக்கக்கூடிய நாடாகா ஆப்கானிஸ்தான் மாறி வருகிறது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!